சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதை தொடர்ந்து, இத்தகைய தாக்குதல் சம்பவம் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இரவு நேரங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.