முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸும், டிடிவி தினகரனும் துரோகிகள் என்றும் இபிஎஸை துரோகி என சொல்ல இருவருக்கும் தகுதி இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் தனியார் மண்டபத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சீனிவாசன், இபிஎஸ் பொதுச்செயலாளர் ஆன பின் அதிமுக தோல்விகளை சந்தித்தது உண்மைதான் என்றும், துரோகிகள் சென்றால் வாக்குகளும் பிரிந்து செல்வது இயல்பு தான் என்றும் விளக்கமளித்தார்.