மதுரை மாநகராட்சி கூட்டத்தில் துணை மேயர் நாகராஜன் பேசுவதற்கு திமுக மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. 32 ஆவது மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த துணை மேயர் நாகராஜன், மதுரையில் மழைநீர் வடிகால் கால்வாய் சரியாக இல்லாததால் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளதாக குறைக்கூறினார். அப்போது, குறுக்கிட்ட திமுக மாமன்ற உறுப்பினர்கள் துணை மேயரின் பேச்சை நிறுத்துமாறு கூறினர்..