பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே நன்னை கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற கட்டடம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை, பொதுமக்கள் மண்ணை போட்டு மூடினர். பழைய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் சேதமடைந்து காணப்பட்டதால் இடித்து அகற்றப்பட்டு, அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் பழைய அலுவலகம் இருந்த இடத்தை விட்டு விட்டு அம்மன் கோவில், அய்யனார் கோவில் மற்றும் தீமிதி திடல் அருகே புதிய கட்டடம் கட்டுவதற்கு பள்ளம் தோண்டப்பட்டதால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் போலீசாரிடம் மனு அளித்தனர்.