விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கழிவுநீர் உறிஞ்சு குழிகள் அமைக்க ஜேசிபி இயந்திரத்துடன் வந்த அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பையநாயக்கன்பட்டியில் கழிவுநீர் உறிஞ்சு குழிகள் அமைத்தால் நிலத்தடி நீர் மாசடைந்து விளைநிலங்கள் பாதிக்கப்படும் என வேதனை தெரிவித்தனர்.