புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மற்றும் தவெகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிசானத்தூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள விவசாய நிலம் அருகே தனியார் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே மருத்துவ சுத்திகரிப்பு ஆலையால் விவசாய நிலங்கள் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.