மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிப்காட் அமைப்பதை எதிர்த்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த புறப்பட்ட கிராம மக்களை, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். வஞ்சிநகரம், கொடுக்கம்பட்டி, பூதமங்களம் ஆகிய 3 ஊராட்சி பகுதிகளை உள்ளடக்கி 278 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைக்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்திய கிராம மக்கள், இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தனர். இதற்காக வாகனங்களில் புறப்பட்டபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.