மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வஞ்சிநகரம், பூதமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 278 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்போவதாக அரசு அறிவித்துள்ளது. இதனால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அப்பகுதி கிராமமக்கள் கவலை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, சிப்காட் திட்டத்தை அரசு கைவிடக்கோரி, அழகுநாச்சியம்மன் கோயில் முன்பு 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் குதித்தனர்.