தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே மோட்டாங்குறிச்சி ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற நினைக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மக்கள் கருப்பு கொடி ஏந்தி தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் இப்பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர கோரி வலியுறுத்தினர்.