தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர புதிய பாஜக தலைவர் தேர்தலில் ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சங்கரன்கோவில் நகர பாஜக தலைவர் தேர்தல் வடக்கு ரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் கலந்துகொண்டு புதிய தலைவராக உதயா என்பவரை தேர்வு செய்த நிலையில், ஒரு தரப்பை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.