மேகதாதுவில் அணைகட்டியே தீருவோம் என்று சூளுரைக்கும் கர்நாடகாவின் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரின் தமிழக வருகைக்கு கண்டனம் தெரிவித்து,நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அவருடைய உருவ பொம்மையை எரிக்க முயன்ற விவசாயிகளை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். முன்னதாக டி.கே சிவகுமாரின் உருவபொம்மையை விவசாயிகளிடம் இருந்து பறித்து அப்புறப்படுத்துவதற்காக, போலீசார் அவர்களிடம் மல்லுக்கட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.