புதுக்கோட்டை மாவட்டம் சேந்தாக்குடி அருகே புதிதாக சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஆதிதிராவிட சமூதாய மக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கீழையூரில், உள்ள தங்களுக்கு சொந்தமான நிலத்தில் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு ஆதி திராவிட சமூதாயத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை போலீஸார் அப்புறப்படுத்த முயன்ற போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவில், போலீஸ் அதிகாரி ஒருவர் தவறி விழுந்தால் பரபரப்பு ஏற்பட்டது.