காஞ்சிபுரம் மாவட்டம் மௌலிவாக்கம் ஊராட்சியில் கபடி விளையாட்டு மைதானத்தில் கீழ் நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க கூடாது என, அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கீழ் நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு பூமி பூஜை போட அமைச்சர் தா.மோ.அன்பரசன் வந்தார். கோயில் நிகழ்வுகள் நடத்தப்படும் இந்த மைதானத்தில் தொட்டி அமைப்பதை நிறுத்திவிட்டு வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர். அப்போது, வேறு இடம் காண்பித்தால் மாற்றிவிடலாம் என உறுதியளித்தார்.