விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நல்லதங்காள் ஆலயத்தில் பாலாலயம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அர்ச்சனாபுரத்தில் உள்ள இந்த கோவிலில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி மர்ம நபர்கள் புகுந்து சிலைகளை சேதப்படுத்தி நிலையில்,சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய கோரி வாக்குவாதம் செய்தனர்.