விருதுநகர் நகராட்சியுடன் கூரைக்குண்டு ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு எதிரிவித்து, திமுக எம்எல்ஏ வீட்டை முற்றுகையிட முயன்ற கிராம மக்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.கூரைக்குண்டு ஊராட்சியினை நகராட்சியோடு இணைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு திரும்ப பெற கோரி, பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பதாகைகள் ஏந்தியபடி பேரணியாக சென்றனர். இதனை தொடர்ந்து, அழகாபுரியில் உள்ள விருதுநகர் திமுக MLA ஏ.ஆர்.ஆர். சீனிவசன் இல்லத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீஸார் தடுத்ததால், ஆத்திரம் அடைந்த பெண்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.