விழுப்புரம் மாவட்டம் மேல் பாதி திரெளபதி அம்மன் கோவில் நடை இன்று இரண்டாவது நாளாக திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் யாரும் சாமி தரிசனம் செய்ய வராததால் நடை சாத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் படி நேற்று திரெளபதி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து இன்று சாமி தரிசனம் செய்ய வருவதாக கூறிய மற்றோரு தரப்பினர் வராததால், கோவில் நடை வழக்கமான நடைமுறைப்படி காலை 7 மணி அளவில் சாத்தப்பட்டது.