ஒன்றரை மாதம் கழித்து, பாம்பன் செங்குத்து தூக்கு பாலம் திறந்து, கடலூரில் இருந்து மாலத்தீவு செல்லும் தோணிப்படகு சென்றதை கண்டு, சுற்றுலா பயணிகள் ரசித்தனர். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடலில் அமைந்துள்ள கால்வாய் வழியாக அவ்வப்போது கப்பல்கள், வடக்கில் இருந்து தெற்கு நோக்கியும், தெற்கில் இருந்து வடக்கு நோக்கியும் செல்வது வழக்கம். இதில் புதியதாக அமைக்கப்பட்ட செங்குத்து தூக்கு பாலம் ஒன்றரை மாதம் கழித்து திறக்கப்பட்டது. இதன் வழியாக கடலூரில் இருந்து மாலத்தீவு செல்ல தோணி படகு மூலம் மீனவர்கள் கடந்து சென்றனர். இதன்பின் பாம்பன் மற்றும் மண்டபம் விசைப்படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து சென்றது. இதனை பாம்பன் சாலை பாலத்தில் நின்று சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.