கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் எல்காட் பூங்காவில் அமைய உள்ள சர்க்யூட் போர்டு நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். அசன்ட் சர்க்யூட் நிறுவனம் சார்பில் 1100 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மேம்பட்ட அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டு (PCB) உற்பத்தி நிலையத்தின் 2ஆம் அலகை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்தியாவில் மின்னணு கூறுகள் உற்பத்தி திட்டத்தின் (ECMS) கீழ் அங்கீகாரம் பெற்ற முதல் PCB உற்பத்தி வசதி, அசென்ட் சர்க்யூட்ஸின் இந்த திட்டமாகும். மேலும், மத்திய அரசின் மின்னணு கூறுகள் உற்பத்தித் திட்டத்தின்(ECMS) கீழ் அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் PCB உற்பத்தித் திட்டமும் இதுவாகும். இந்த தொழிற்சாலை மூலம் 1,200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.