சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரதான சாலையில் திறக்கப்பட்ட தனியார் பாரை மூட வலியுறுத்தி கடைகளை அடைத்து போராட்டம் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பர்மா காலனி பகுதியில் கோயில்கள், தேவாலயம், மருத்துவமனை உள்ள பிரதான சாலையில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகே பார் திறக்கப்பட்டதால் கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்கள் அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் பார் முன் குவிந்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்திய நிலையில், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.