கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் புதிதாக கட்டப்பட்ட உற்பயிற்சி கூடத்தை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார். திருக்கோவிலூர் நகராட்சி சார்பில் அஷ்டலட்சுமி நகரில் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டது. அதனை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்து ஜிம்மை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்த சாதனங்களில் உடற்பயிற்சி செய்து அசத்தினார்.