செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரியிலிருந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு பின்னர், உபரி நீர் வெளியேற்றப்படும் நிலையில், 15 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் ஏரியில் நடைபெற்று வந்த சீரமைப்பு பணிகள் காரணமாக, உபரி நீர் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது அப்பணிகள் முடிவுற்றதையடுத்து, ஏரிக்கு வந்து கொண்டிருக்கும் 300 கன அடி உபரிநீர், கிளியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அப்போது பூஜை செய்து மலர் தூவி வரவேற்றனர். மதுராந்தகம் ஏரியின் உபரி நீர் செல்லும் கரையோரம் அமைந்துள்ள கடப்பேரி, முருக்கஞ்சேரி, முன்னுத்திக்குப்பம், கத்திரிச்சேரி, முள்ளி, வளர்பிறை ஆகிய கிராமங்களை சேர்ந்த கரையோர பொதுமக்களுக்கு நீர்வளத் துறை சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோரம் யாரும் இருக்க வேண்டாம், வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.