தமிழகத்தில் இரண்டாவது கட்டமாக 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தபடி முதற்கட்டமாக 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை கடந்த 2023 ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்காக அவர் திறந்து வைத்தார். இந்நிலையில் இரண்டாம் கட்டமாக அடையாறு சாஸ்திரி நகர் பகுதியில் நகர்ப்புற நல வாழ்வு மையத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் கல்வெட்டையும் திறந்து வைத்தார்.