மேட்டூர் அணையில் இருந்து திறந்து விட்ட தண்ணீர் சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி கால்வாய்க்கு வந்தடைந்த நிலையில், விவசாயிகள் கிடா வெட்டி மலர் தூவி வரவேற்பு அளித்தனர். கால்வாயில் முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.