இடி, மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயிகளுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, குறைதீர் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பங்கஜம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கரூர் கூட்ட நெரிசலிலும், கள்ளச்சாராயம் குடித்தும் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிய தமிழக அரசு, இடி, மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயிகளுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியதற்கு கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. மேலும், கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு கோரி, சேதமடைந்த நெல்மணிகளை மூட்டையாக கட்டி தலையில் வைத்து பங்கேற்றனர்.