தொடர்ந்து விலை சரிவை சந்தித்து வரும் சின்ன வெங்காயத்தால் தேனி மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளான விசுவாசபுரம், உப்புக்கோட்டை, மாணிக்கபுரம், கூழையனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த மாதம் ஒரு கிலோ 28 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது 18 ரூபாய்க்கு மட்டும் கொள்முதல் செய்யப்படுவதால் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக வேதனை தெரிவித்த விவசாயிகள், விளைச்சல் மற்றும் அழுகல் நோயும் விலை குறைவுக்கு காரணம் என்றனர்.