ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள வணிக வளாகத்தில், கட்டிட பணியின் போது சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார். பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள புதிதாக கட்டப்பட்ட ஜவுளி வணிக வளாகத்தின் முதல் தளத்தில் முருகேசன் என்பவர் ஆயத்த ஆடைகள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடையின் நடுவே உள்ள சுவரை டிரில்லிங் இயந்திரம் கொண்டு இடிக்கும் பணியில் கருங்கல்பாளையத்தை சேர்ந்த சுப்பரமணியன், ஆனந்தன் ஆகியோர் ஈடுபட்டனர். எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து சுப்பிரமணியனின் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த ஆனந்தன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.