சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ கட்டுமான பணியின் போது கான்கிரீட் பாலம் விழுந்து ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், எல்& டி நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கவனக்குறைவாக பணியாற்றிய நான்கு இன்ஜினியர்கள் மெட்ரோ திட்ட பணியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த 12 ம் தேதி ராமாபுரத்தில், மெட்ரோ கான்கிரீட் பாலம் விழுந்து ரமேஷ் என்பவர் உயிரிழந்த நிலையில், மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ஜுனன் தலைமையில் குழு விசாரணை நடத்தி அறிக்கை அளித்தது.இதையும் படியுங்கள் : கொரோனா தொற்றால் மூன்று பேர் பலி..