திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் சாலையில் கிடந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.கனகாம்பாள் கோவில் தெருவை சேர்ந்த பார்த்திபன் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை பைக்கில் செல்லும் போது தவறவிட்டுள்ளார். இதனை அஷேசம் கிராமத்தை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் கண்டெடுத்ததும் போலீஸ் மூலமாக பார்த்திபனிடம் ஒப்படைத்தார்.