விருதுநகர் மாவட்டம் குகன்பாறையில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஆட்டோவில் இருந்து மூலட்பொருட்கள் இறக்கி வைக்கும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக ரசாயன மூலப்பொருட்களில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோ ஓட்டுநர் கோவிந்தராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தீக்காயமடைந்த குருமூர்த்தி பாண்டியன் என்பவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.