தொடர் விலை உயர்வால், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 11,000 ரூபாயை நெருங்கி வருகிறது. சென்னையில், இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.480 அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ரூ.85,600க்கு விற்பனை ஆகிறது.சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் அதிக முதலீடு செய்வது உள்ளிட்ட காரணங்களால், இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில், நேற்று முன்தினம் செப்டம்பர் 27ஆம் தேதி, தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு, 90 ரூபாய் உயர்ந்து, 10,640 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு, 720 ரூபாய் அதிகரித்து, 85,120 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில், இன்று திங்கள்கிழமை, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.85,600க்கு விற்பனை ஆகிறது.ஒரு கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ஒரு கிராம் ரூ.10,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.86 ஆயிரத்தை எட்டி உள்ளது.