கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கான ஒரு நாள் சுற்றுலா செல்லும் பேருந்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், மாற்றுத்திறனாளி நலத்துறையுடன் இணைந்து ஒருநாள் சுற்றுலாவாக, பிச்சாவரம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல ஏற்பாடு செய்தது.