தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதை நடும் திட்டத்தில் மொடக்குறிச்சி கீழ்பவானி வாய்க்கால் கரையோரத்தில் 3 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டன.ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா வேலங்காட்டு வலசு பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பினர் கலந்து கொண்டு கீழ்பவானி வாய்க்கால் கரையோரங்களில் 3 ஆயிரம் பனை விதைகளை நட்டனர்.இதில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு எம்பி பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.