திருப்பத்தூர் அருகே பின்னால் குழந்தை இருப்பது தெரியாமல் தந்தை டிராக்டரை இயக்கிய போது, சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. நயனசெருவு பகுதியை சேர்ந்த அருள் பிரகாசம் - சங்கீதா தம்பதிக்கு 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில், ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. விவசாயியான தந்தை பின்னால் குழந்தை இருந்ததை பார்க்காமல் உழவு பணிக்கு டிராக்டரை எடுத்த போது, சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தாத்தாவான முருகன் தனது பேரனை எப்படியாவது காப்பாற்றி விடுவேன் எனக்கூறி குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே ஓடி வந்தது சோகத்தை ஏற்படுத்தியது.