கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுங்கான்கடையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் ஐயப்பா மகளிர் கல்லூரியில், ஓணம் பண்டிகை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவிகள் கேரள பாரம்பரிய உடையணிந்தும், திருவாதிரை நடனமாடியும் கொண்டாடி மகிழ்ந்தனர். கேரளாவின் ஓணப் பண்டிகை கொண்டாட்டங்கள் குமரி மாவட்டத்திலும் முழு அளவில் களைகட்ட தொடங்கியுள்ளன.