கேரள பாரம்பரிய உடை அணிந்து திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டு ஆடல் பாடலுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.கேரளாவில் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றான ஓணம் பண்டிகை வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவன வளாகத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் கேரள பாரம்பரிய உடை அணிந்து அத்தப்பூ கோலமிட்டு ஆடல் பாடலுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.