கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களை கட்டியது.மாணவ, மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டும், ஊஞ்சலாடியும், செண்டை மேளம் முழங்க, மாவேலி வேடமணிந்து திருவாதிரை நடனம் ஆடி, பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் அடுத்த மாதம் 5ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தற்போது தமிழக, கேரள எல்லை பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கியுள்ளது. தக்கலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மற்றும் கலைக் கல்லூரியிலும் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. அப்போது, மாணவிகள் பாரம்பரிய திருவாதிரை நடமாடியும் அசத்தினர்.