சென்னை திருவொற்றியூரில் வடசென்னை மலையாளிகள் சங்கம் சார்பில், ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. திருவோணம் பண்டிகை வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் வடசென்னை மலையாளிகள் சங்கம் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், அத்தப்பூ கோலம், தோரணங்கள், செண்டை மேளம், திருவாதிரை நடனம் என ஓணம் களைகட்டியது. மேலும் அச்சங்கத்தின் சார்பில் 1000 பேருக்கு, பாலக்காடு மட்டை அரிசி, நேந்திரன் சிப்ஸ், கேரளா பப்படம், ஏலக்காய், பாசிப்பருப்பு, வெல்லம், சர்க்கரை, காய்கறிகள் உள்ளிட்ட 21 வகையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.