திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மகாராணி மகளிர் கல்லூரியில், ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.கேரள பாரம்பரிய உடை அணிந்து வந்த மாணவிகள், பலவகையான மலர்களைக் கொண்டு விதவிதமாக கோலமிட்டனர்.மேலும் மாணவிகள் அனைவரும் இணைந்து ஆட்டம், பாட்டத்துடன் ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.இதையொட்டி கல்லூரி நிர்வாகம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.