புதுச்சேரி அரசின் பாரதியார் பல்கலைக்கழகத்தில், கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. நடனப் பள்ளி மாணவியர் அத்தப்பூ கோலமிட்டும், மகாபலி சக்ரவர்த்தி தொடர்புடைய பாடல்களைப் பாடியும், அதற்கேற்ப நடனமாடியும் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். மேலும் கேரளாவின் பாரம்பரிய நடனமான கைக்கொட்டி களியையும், மாணவியர் ஆடி மகிழ்ந்தனர்.இதையும் படியுங்கள் : ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு சோதனைக் கிணறு அமைக்கும் பணி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்