விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ரத்ததானம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திரைப்பட பாடல் ஆசிரியர் சினேகன் கலந்துகொண்டு, ரத்த தானம் வழங்கிய நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஊக்குவித்தார்.