கிருஷ்ணகிரியில், ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பண்டிகையொட்டி, சாமந்தி பூக்களின் விலை உயர்ந்து 300 ரூபாய் வரை விற்பனையானது. வேப்பனப்பள்ளி, சூளகிரி, பேரிகை, பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் சாமந்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், கடந்த மாதம் வரை ஒரு கிலோ சாமந்தி பூக்கள் 100 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்த நிலையில், பண்டிகையை முன்னிட்டு கிடுகிடுவென விலை உயர்ந்து ஒரு கிலோ 300 ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.