ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், புதுக்கோட்டையில் வாழைத்தார்கள் விலை உயர்ந்துவிட்டதால் விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாழைத்தார்கள் பெருமளவு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. செவ்வாழைப்பழம் ஒரு தார் 600 முதல் 900 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் கற்பூரவல்லி பழம் 200 முதல் 400 ரூபாய்க்கும் ரஸ்தாலி வாழை 900 ரூபாய் வரைக்கும் விற்பனையாகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் விலை குறைவு என்றாலும் நடப்பு ஆண்டில் இது கணிசமான உயர்வு தான் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.