கோவை மாவட்டம் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட தினத்தையொட்டி, முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் திருவுருவ படத்திற்கு அமைச்சர் சாமிநாதன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் காமராஜர், முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ராவ் மற்றும் தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு அமைச்சர் சாமிநாதன் மலர் தூரி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.