காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற கச்சபேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை மாதத்தையொட்டி நடைபெற்ற தெப்போற்சவத்தின் மூன்றாம் நாளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப திருத்தேரில் சுந்தாம்பிகையுடன் எழுந்தருளிய கச்சபேஸ்வரர், திருக்குளத்தை 9 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.