நவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் உள்ள ஸ்ரீபெரியநாயகி அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நவரத்திரி விழாவின் நான்காம் நாளையொட்டி, ஸ்ரீ பெரியநாயகி அம்மன் அன்னபூரணி அலங்காரத்தில் எழுந்தருளினார். இதனைதொடர்ந்து, அம்மனை தரிசித்த பக்தர்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு கண்காட்சியினை பார்த்து ரசித்து சென்றனர்.