கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரத்து 8 சங்காபிஷேகம் நடைபெற்றது. விபூதி, மஞ்சள், திரவியப் பொடி, இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.