புரட்டாசி 4 வது சனிக்கிழமையை முன்னிட்டு தேனி போடிநாயக்கனூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 200 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் புரட்டாசி நிறைவு சனிக்கிழமையையொட்டி மூலவருக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் பட்டு வஸ்திரங்கள் சாற்றப்பட்டு திருப்பதி ஏழுமலையான் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.