விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்சவத்தின் இரண்டாவது நாளில் அம்பாள் ரெங்க மன்னார் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். புதன்கிழமை இரவு 7 மணிக்கு கோவில் பிரகாரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் திருவாய்மொழி சேவா காலம் நடைபெற்றது.