உலகையே உறையவைத்த சுனாமி பேரழிவின் 20 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி கடலூர் சிங்காரத்தோப்பு கடற்கரைக்கு அமைதி பேரணியாக வந்த ஏராளமானோர் கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். பின்னர், ஆழிப்பேரலையில் சிக்கி உயிர் நீத்தவர்களை எண்ணி அவர் கண்ணீர் விட்டு அழுதனர்.