வருகிற 15ஆம் தேதி 1,000 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தபடவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள அரிமா சங்க தொழிலாளர் காலனி உயர்நிலைப்பள்ளியில் இதயம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை முகாமை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெங்குவால் இதுவரை ஏழு பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் தெரிவித்தார். மேலும் பருவமழை தொடங்கவுள்ள நிலையில் காய்ச்சப்பட்ட நீரை பருக வேண்டும் எனவும், மழைநீர் தேங்காமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தினார்.